அப்பா மெக்கானிக்.நாளும் பொழுதும், இரவும் பகலும் பட்டறையிலேயேதான் கிடப்பார்.இரும்பு பிடிச்சவன் கையும், சிரங்கு பிடிச்சவன் கையும் சும்மாயிருக்காதுன்னு சொலவடை இருக்கில்லையா.அதுக்கு முழுசா பொருந்தக் கூடிய உதாரணம் அப்பாதான். இப்ப 70 வயசாகுது,இன்னமும் அப்படித்தான். நல்லா ஓடற மோட்டாரை தண்ணி வேகமா இழுக்க மாட்டேங்குதுன்னு சொல்லி அக்கு வேறா ஆணி வேறா கழட்டி அதை சுத்தமா ஓடாம பண்ணி, அப்புறம் மண்டைய உடைச்சு சரி பண்ணி, ரெண்டு மூணு நாள் கழிச்சு ஓடவைப்பார்.
இன்னைக்கு காலையில் கூட வீட்டுக்கு வந்தவர் ”ஏன்ப்பா இந்த ஃபேன் ஸ்லோவோ ஓடுதுன்னு சொல்லி கழட்டி ஏதோ பண்ணிட்டு இருந்தார்.நான் ஆபிஸ்க்கு வந்துட்டேன்..எனக்கு தெரியும் சாயந்திரம் வீட்டுக்கு போனா, அந்த ஃபேன் குத்துயிர் கொலையுயிராய் மூலைல கிடக்கும்..ரெண்டு நாள் கழிச்சு கண்டென்ஸர் போய்டுச்சுப்பான்னு சொல்லி கொண்டு வந்து வேற மாத்தி போட்டுட்டு போவார். எனக்கு வாய்ச்சவங்க அவருக்கு சப்போர்ட்டுங்கிறதால,ஓரளவுக்கு மேல அவரை கண்டிக்க முடியாது. இப்படியாகப்பட்ட அப்பா அதிக பட்ச உற்சாகமா கொண்டாடறது ஆயுத பூஜை.
காலையிலேயே பட்டறைக்கு போய்டுவோம்.கொஞ்ச நேரத்துல தெருப்பசங்க எல்லாம் பட்டறைக்கு வந்துடுவாங்க.ஒரே கூத்தும் கும்மாளமுமா க்ளீனிங் நடக்கும்.வருசக் கணக்கா க்ளீன் பண்ணாம கிடக்கும் எண்ணற்ற ஸ்பேனர்ஸ்,சுத்தியல்கள், திருப்புளிகள்,ஜாக்கிகள்,பைப்புகள்ன்னு ஏகப்பட்ட சமாச்சாரங்கள்.எல்லாத்தையும் கொண்டு வந்து ஒரு இடத்துல குமிச்சு, தண்ணி விட்டு, சீயக்காய் போட்டு, தண்ணி விட்டு, சோப்பு போட்டு, மீண்டும் தண்ணி விட்டு அலசி, துணியில் நல்லா துடைச்சு சந்தனம், குங்குமம், விபூதி வைச்சு அலங்கரிப்போம்.அதுக்குள்ள அப்பா அவரோட சீடர்கள் ரெண்டு மூணு பேர் இருப்பாங்க.அவங்களை வைச்சு சுவர்,தரை எல்லாம் துடைச்சு, ஒட்டடை அடிச்சு, கழுவி வைப்பார்.
எல்லா சாமானையும் கொண்டு போய் அந்தந்த இடத்துல அழகா அடுக்கிட்டு அதற்கப்புறம் கலர் பேப்பர் அலங்காரம். அப்பாகிட்ட காசு வாங்கிட்டு பசங்களை கூட்டிட்டு கடைவீதி போய், டிசைன் டிசைனா சாதா கலர் பேப்பர்ஸ், ஜிகினா வகையறாக்கள் வாங்குவோம்.எப்படி தீபாவளி வெடி பர்சேஸ் பட்ஜெட்டுல 60% பிஜிலி கிராக்கர்ஸ்க்கு போகுமோ அதே மாதிரி 60% காசு முக்கோணமா கலர் பேப்பர்ஸ் வருமே அதுக்கு போயிடும்.கத்தை கத்தையா வாங்கி தோரணம் கட்டுவோம். எல்லா பேப்பர் மற்றும் சரடு வாங்கிட்டு போனா, அம்மா ரெடியா மைதா மாவு பசை காய்ச்சி வச்சிருப்பாங்க.எல்லா பயலும் செட்டு பிரிஞ்சு, கிடைக்கிற இடத்துல எல்லாம் சரடு கட்டி வரிசையா அதுல கலர் பேப்பர் ஒட்டி தோரணம் கட்ட ஆரம்பிச்சுடுவோம். அங்கங்க நடுவில் மானே, தேனே மாதிரி தொங்கல் பேப்பர் கோபுரங்கள், ஜிகினா சரங்கள் எல்லாம் கட்டப்படும். ஆளுயர சைஸ்க்கு ஸ்பீக்கர்ஸ் மற்றும் நிறைய குமிழ்களுடன் ஆம்ப்ளிஃபயர் வந்து இறங்கும்.லேட்டஸ்ட் பாட்டு போட்டு நிலம் அதிர கேட்டுகிட்டே பசங்க உற்சாகமா வேலை செய்வோம்.
ஒரு நாலஞ்சு மணி போல எல்லா அலங்காரமும் முடிச்சுட்டு, அவசர அவசரமா ஓடிப்போய் குளிச்சு ட்ரெஸ் மாத்திட்டு வரதுக்குள்ள பெரிய பெரிய பாத்திரங்களில் சுண்டல், பெரிய மூட்டையில் பொறின்னு ரெடியா இருக்கும். பசங்க சுத்தி உட்கார்ந்து பாலித்தீன் பைகளில் எல்லாத்தையும் போட்டு ரெடி பண்ணி ஓரங்கட்டுவோம்.அந்த ஏரியாவிலேயே அப்பா ரொம்ப வருசம் இருப்பவர் என்பதால் நிறைய பேர் பூஜைக்கு வருவார்கள்.எனவே, மலை போல் சுண்டல் மற்றும் பொறி பைகள் குவியும். ஆறு மணிபோல அப்பாவும் அவர் சீடர்களும் பயபக்தியா சூடம்,சாம்பிராணி சகிதம் சாமி கும்பிட்டு முடிக்க பொறி,சுண்டல் போணியாகும்.அதுக்கப்புறம் பெரியவங்க செட் ஒரு புறமும் வாண்டுகள் ஒரு பக்கமும் அரட்டை முடித்து எல்லோரும் கிளம்புவார்கள்.நிற்க.
இதற்கப்புறம்தான் பொடுசுங்க ஆவலுடன் எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வு ஆரம்பமாகும்
நைட்டு எட்டு மணி வாக்கில் எல்லோரும் வீடு போய் சாப்பிட்டு வந்த பின் அந்த உற்சாக அனுபவம் ஆரம்பமாகும்.அதுதான் டெக்கில் படம் பார்ப்பது.
சாயந்திரம் கலர் பேப்பர் வாங்கப் போகும் போதே ராதா வீடியோ விஷனில் போய் டெக் வாடகைக்கு எடுத்து விடுவோம். அன்னிக்கு வந்து வாடகைக்கு எடுப்போம்ன்னு ரெண்டு மூணு நாளுக்கு முன்னமேயே போய் ரிசர்வ் வேற பண்ணி வைக்கணும். டெக் எடுக்கறது பெரிய விசயமில்லை.கேசட் செலக்ட் பண்ணறதுதான் அலாதியான அனுபவம்.நாலைஞ்சு ஃபைல்ல, பாலித்தீன் கவர்க்குள்ள இங்க் பேனால, குண்டு குண்டா அழகான கையெழுத்துல எழுதி பேப்பர் சொருகி இருக்கும். முதலில் வருவது எம்.ஜி.ஆர்.ஹிட்ஸ் அப்புறம் சிவாஜி வழியே, ரஜினி, கமல்ன்னு லிஸ்ட் தொடரும்..ரெண்டு மூணு நாள் தீவிர டிஸ்கசன் பண்ணி, படம் பேர் எல்லாம் சீட்டுல குறித்து வைத்து கொண்டு போனால் அதில் பாதி இருக்காது.ஆனாலும், பொறுமையாக தேடித் தேடி கேசட் பொறுக்குவோம். one of the toughest situation to make a decision till date அப்படின்னா அது இந்த கடையில வருசத்துக்கு ஒருக்கா போய் இந்த கேசட் செலக்ட் பண்ணறதுதான் :)
டெக்,கலர் டிவி வாடகை எவ்வளவு என மறந்து விட்டது.கேசட் பத்து ரூபாய் ஒரு நாளைக்கு.24 hrs செக் இன்.அடித்து பிடித்து அடுத்த நாள் அதே நேரத்துக்குள் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அடுத்த செட் எடுத்துப் போவோம். ஒவ்வொரு காலகட்டத்துலயும் வாழ்க்கை லட்சியமா ஏதாவது ஒண்ணு இருக்கும். காலேஜ் படிக்கிறப்ப ஸ்போர்ட்ஸ் ஷீக்கும், டிவிஎஸ் சுசுகி பைக்குக்கும் ஆசைப்பட்ட மாதிரி. இந்த டெக் வாடகைக்கு எடுக்கிற கட்டத்துல் இருந்த லட்சியம், சொந்தமா டெக்கும்,கலர்டிவியும் வீட்டுல இருக்கணும் அப்படிங்கறதுதான் :)
பாயும்புலி, போக்கிரி ராஜா, சட்டம் ஒரு விளையாட்டு (குள்ளநரி,புல்லுக்கட்டு, வெள்ளாடு எத்தனை பேருக்கு இந்த பாட்டு ஞாபகம் இருக்கு:)), உரிமை கீதம், சங்கர்குரு இப்படி இருக்கும் கேசட் லிஸ்ட். இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த என்றொரு படம் யாராவது பார்த்திருக்கீங்களா?.அந்த கேசட் எல்லாம் எடுத்து வந்து பார்ப்போம். அப்பா பட்டறைக்கு பக்கத்தில் ஒரு அண்ணண் வெல்டிங் பட்டறை வைத்திருப்பார்.அவர் தனியே பணம் கொடுத்து ஜெய்சங்கர் படம் எடுத்து வரச் சொல்வார். மினிமம் ஐந்து கேசட் எடுத்துக் கொள்வோம்.
ஒன்பது மணி வாக்கில், கலர் டிவி, டெக் அனைத்தும் பட்டறைக்கு வெளியே செட் செய்யப் படும். மினிமம் ஐம்பது பேராவது குழுமியிருப்பார்கள்.எவ்வளவுதான் விவரமாக டெக் வாடகைக்கு விடுபவரிடம் கேட்டிருந்தாலும், மிகச்சரியாக வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஒயர்கள் மாற்றி சொருகப் படும்.ஊமைப் படம் மட்டும் ஓடும்.ஒயர்கள் மாற்றி சொருகினால் காட்சி மறைந்து சத்தம் மட்டும் கேட்கும்.சரி செய்யப் படும் நேரத்திற்குள்ளாக டைட்டில் முடிந்து, வசனம் ஆரம்பித்து விட்டால் கூட்டத்தில் சலசலப்பு அதிகமாகும். அட்வைஸ் அய்யாசாமிகளின் அட்ராசிட்டி அதிகமாகும்.படம் போய் கொண்டிருக்கிறதே என்ற பதட்டம் சூழலை உஷ்ணமாக்கும். கேசட் திருப்பி போட்டு பாருப்பா என்று சொன்ன பிரகஸ்பதி எல்லாம் உண்டு.
ஒரு வழியாக எல்லாம் சரியாகி ரீவைண்ட் செய்து படம் போடப்படும் போது, மொத்த கூட்டமும் ஆன்மாவை கண்டுணர்ந்த நிலையில் அமைதி காக்கும்.கேசட் தேய்ந்து போயிருந்தால், பத்து நிமிடம் ஓடிய பிறகு க்ரெயின்ஸ் வர ஆரம்பிக்கும் அல்லது டேப் சிக்கி கொள்ளும்.மெதுவாக கேசட்டை வெளியில் எடுத்து, சிக்கியுள்ள டேப்பை அலுங்காமல் குலுங்காமல் வெளியில் இழுத்து, சுண்டுவிரல் கொண்டு அந்த அடிபட்ட டேப்பின் பகுதியை கொஞ்சம் ஓட்டி விட்டு, கேசட் மீண்டும் சொருகப் பட்டு படம் ஆரம்பிக்கும். விடிவதற்குள் மூன்று படமாவது பார்த்து விடுவோம்..
அடுத்த நாள், டிவியும் டெக்கும் வீட்டுக்கு ஷிப்ட் ஆகிவிடும். நாள் முழுமைக்குமான சாப்பாடு முந்தின நாளே ரெடியாகி விடும் எல்லோர் வீட்டிலும்.ஒரு படம் முடிந்ததும் அதிக பட்சம் அரைமணி நேர கேப்.உஸ் இஸ் என எல்லோரும் திரும்ப ஆஜராகி விடுவார்கள் அடுத்த படத்துக்கு.இங்கே பெரும்பாலும் அம்மா மற்றும் அக்கம்பக்கத்து அத்தை,அக்காக்களின் செலக்சன்தான்.சரஸ்வதி சபதம் (what an epic!!), நவக்கிரக நாயகி, எதிர் நீச்சல், கலாட்டா கல்யாணம் என்று போகும் அந்த லிஸ்ட்.அதை கொஞ்ச கொஞ்சம் சாய்ஸில் ரெஸ்ட் விட்டு பார்ப்போம். அப்பத்தான் நைட் கிடைக்கிற கேப்பில் ஆர்மர் ஆஃப் காட், ப்ரொஜெக்டர் எல்லாம் பார்க்க முடியும்.
ரெண்டு மூணு நாள் கொண்டாட்டம் முடிந்து, மனசேயில்லாமல் டெக்,டிவியை கொண்டு போய் கொடுத்து விட்டு அடுத்த சீசன் விளையாட்டை ஆரம்பித்து விடுவோம்.அதிகம் சினிமாக்களுக்கு எல்லாம் அப்பா கூப்பிட்டு போக மாட்டார்.பக்கத்துல இருக்கிற டெண்ட் தியேட்டர் எல்லாம் ஒன்பது,பத்தாவது படிக்கிறப்ப எட்டி பார்த்ததுதான். அதனால், தீபாவளிக்கு சற்றும் குறையாத உற்சாக மனநிலை இந்த ஆயுதபூஜைல டெக் மற்றும் சினிமாக்கள் மூலமா கிடைக்கும்.
சுபம் :)

No comments:
Post a Comment