Saturday, December 22, 2007

மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை..

அரைத்தூக்கத்தில்,பேப்பர் சீக்கிரம் படிக்க வேண்டுமே என்கிற அவதியில் பல்துலக்கல்,சொந்தக்காசில் வாங்கும் தினமலர்,எக்கானாமிக் டைம்ஸ், ஓசி தினகரன்( பக்கத்து வாடகைக்கடைக்கு வரும் நாளிதழ் நம்ம வீட்டில்தான் விழும்),பேப்பரினூடே சூடாக காபி,டாய்லெட்-ல் இருக்கும் லைப்ரரியில் (வீட்டுகாரம்மா அப்படித்தான் சொல்வாங்க) இருந்து ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு காலைக்கடன்,ஆபிஸ் சமாச்சரங்கள் மனசுக்குள் டிரையிலர் ஓட குளியல், cnbc+ndtv profit மாத்தி மாத்தி பார்த்துக்கிட்டே டிபன்,கர்சீப்,பனியன்..இத்யாதி காணோம்னு அலப்பறையை பண்ணிகிட்டே டிரெஸ்ஸிங்,வீட்ல கொடுக்கற சோத்து டப்பாவை பத்து வருசம் ஓல்ட் மாடல் வண்டில மாட்டிக்கிட்டு,phone-ல இருக்கிற player playlist-ல ஒண்ணை செலக்ட் பண்ணி headset காதுல மாட்டிகிட்டு, பன்னிரெண்டு வருசமா போற அதே ரூட்டுல இருபது நிமிசம் வண்டியை ஓட்டிக்கிட்டு போயி,பன்னிரெண்டு வருசமா உட்கார்ந்து தேஞ்சு போன அதே நாற்காலி,என் வாழ்நாள்ல என்கூட அதிக நாள் இருந்த கம்ப்யூட்டரில் மெயில் செக் பண்ணி,ரிப்ளை பண்ணி, கத்தி கத்தி, டென்ஷனாகி, ஒவ்வொரு shipment-ம் ontime-ல ship ஆகணும்னு விரட்டி, செஞ்சு செஞ்சு அலுத்து போன அதே வேலை,அதே முகம்,
அதே தவறுகள்,அதே பிரச்னைகள், தீர்வுகள்,மதியச்சாப்பாடு,அப்பப்ப பங்குச்சந்தை பக்கம் எட்டி பார்த்து எதையாவது வாங்கி,எதையாவது வித்து, வீட்டுகாரம்மாக்கிட்ட இருந்து இன்னும் கிளம்பலையான்னு போன் வந்தவுடனே அவசர அவசரமா எல்லாத்தையும் அள்ளி உள்ள போட்டுட்டு,வேக வேகமா வீட்டுக்கு போய் இரண்டு வயது செல்லப்பெண்ணுடன் விளையாட்டு, மீண்டும் அதே cnbc யோட டின்னர்..அப்புறம் வீட்டுக்காரம்மாவோட லெக்சர் கேட்டுகிட்டே தூக்கம்..


ஏன்,ஏன் இப்படி..எல்லோருக்குமே இப்படித்தானா.. மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை!!!வேற வழியே இல்லையா!!தப்பிக்கவே முடியாதா!!

13 comments:

மங்களூர் சிவா said...

//
(வீட்டுகாரம்மா அப்படித்தான் சொல்வாங்க)
//
//
வீட்ல கொடுக்கற சோத்து டப்பாவை
//

//
பன்னிரெண்டு வருசமா போற அதே ரூட்டுல இருபது நிமிசம் வண்டியை ஓட்டிக்கிட்டு போயி,பன்னிரெண்டு வருசமா உட்கார்ந்து தேஞ்சு போன அதே நாற்காலி,என் வாழ்நாள்ல என்கூட அதிக நாள் இருந்த கம்ப்யூட்டரில் மெயில் செக் பண்ணி,ரிப்ளை பண்ணி, கத்தி கத்தி, டென்ஷனாகி, ஒவ்வொரு shipment-ம் ontime-ல ship ஆகணும்னு விரட்டி, செஞ்சு செஞ்சு அலுத்து போன அதே வேலை,அதே முகம்,
அதே தவறுகள்,அதே பிரச்னைகள், தீர்வுகள்,மதியச்சாப்பாடு,
//
//
அப்புறம் வீட்டுக்காரம்மாவோட லெக்சர் கேட்டுகிட்டே தூக்கம்..
//
//
வேற வழியே இல்லையா!!தப்பிக்கவே முடியாதா!!
//

ராதாகிருஷ்ணன் சார் we are gifted!!!!!

ஆனா எவ்வளோ நாளைக்கு நிரந்தரம்னு தெரியலை!!!!

அறிவன் /#11802717200764379909/ said...

ஏதேனும் ஒரு புதிய விதயத்தை கற்கத்துவங்குங்கள்,காலாற எங்கேனும் நடவுங்கள் அல்லது ஒரு முறை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்குச் சென்று அங்கு வரும் தன்னார்வலர்களின் தகுதிகள்,படிப்பு மற்றும் வேலைகள் சம்பந்தமாக விசாரித்துப் பாருங்கள்,அல்லது தமிழிலக்கியங்களின் தேர்ந்த புத்தகங்களைத் தெரிவு செய்து கொண்டு படிக்கத் துவங்குங்கள்...
வாழ்க்கை எண்ணில்லா கிளைகளைக் கொண்ட மரம்.
நாம்தான் ஏறிய கிளையை விடாது தொங்கும் குரங்காய் வாழ்வைத் தேய்க்கிறோம்..

வவ்வால் said...

எவனோ ஒருவன் படத்தின் துவக்க காட்சியைப்பார்த்த விளைவா? அப்படி ஒரு ஒழுங்கு நியதி அமைந்த வாழ்க்கை கிடைப்பதற்கே போராடித்தான் அங்கு வர வேண்டி இருக்கும். இதுவே ஒரு சொகுசு வாழ்க்கை தான்.

இப்படி நியமித்தப்படி வாழாமல் இருக்கணும்னா கடலில் போய் மீன் பிடிக்கலாம், நீச்சல் தெரியாதே என்றால் கிராமத்தில் விவசாயம் செய்யலாம்.

மழை வருமா, வெயில் அடிக்குமா தெரியாது. தண்ணீர் இரைக்க கரண்ட் வருமா தெரியாது, இந்த வருஷம் என்ன விளைச்சல் வரும் தெரியாது, என்ன விலை கிடைக்கும்னு தெரியாது "full of suspense" தான் எப்படி வசதி :-))

dondu(#11168674346665545885) said...

//phone-ல இருக்கிற player playlist-ல ஒண்ணை செலக்ட் பண்ணி headset காதுல மாட்டிகிட்டு,..//
வேற வினையே வேண்டாம், இன்னும் கொஞ்ச நாளில் காது அவுட்டாகி விடும். பிறகு மற்றவர் பேசுவதை உதட்டைப் பார்த்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். கேலிக்கு சொல்லவில்லை, சீரியசாகவே சொல்கிறேன்.

நான் கூறும் ஆலோசனைகளை பரிசீலிக்கவும்.

1. தினசரி ரொட்டீனை மாற்றுங்கள். செல்லும் ரூட்டை மாற்றுங்கள். தேவையானால் சில நாட்களுக்கு சைக்கிளில் செல்லுங்கள்.
2. புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். கணினியில்தான் பல பலே விஷயங்கள் நடக்கின்றனவே.
3. இன்றுதான் உங்கள் கடைசி நாள் என நினைத்து ஒவ்வொரு நொடியையும் அனுபவியுங்கள்.

வாழ்க்கை அற்புதமயமானது என்பதை உணர்ந்து கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராதாகிருஷ்ணன் said...

சிவா - // " we are gifted!!!!! ஆனா எவ்வளோ நாளைக்கு நிரந்தரம்னு தெரியலை!!!!" //

நிச்சயம் நான்(ம்)ஆசிர்வதிக்கபட்டவர்கள்தான்.இருந்தும் ஏதோ நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது..

அறிவன் - நல்வரவு. // வாழ்க்கை எண்ணில்லா கிளைகளைக் கொண்ட மரம்.நாம்தான் ஏறிய கிளையை விடாது தொங்கும் குரங்காய் வாழ்வைத் தேய்க்கிறோம் // என்னை கவர்ந்த உவமை.

ராதாகிருஷ்ணன் said...

வவ்வால் - // எவனோ ஒருவன் படத்தின் துவக்க காட்சியைப்பார்த்த விளைவா?// இன்னும் படம் பார்க்க வில்லை.எனது பதிவு ஆறுமாத மன உணர்வின் வெளிப்பாடு

//அப்படி ஒரு ஒழுங்கு நியதி அமைந்த வாழ்க்கை கிடைப்பதற்கே போராடித்தான் அங்கு வர வேண்டி இருக்கும். இதுவே ஒரு சொகுசு வாழ்க்கை தான்.// மிக நிதர்சனமான யதார்த்தமான உண்மை.ஆமோதிக்கிறேன்

//இப்படி நியமித்தப்படி வாழாமல் இருக்கணும்னா கடலில் போய் மீன் பிடிக்கலாம், நீச்சல் தெரியாதே என்றால் கிராமத்தில் விவசாயம் செய்யலாம். மழை வருமா, வெயில் அடிக்குமா தெரியாது. தண்ணீர் இரைக்க கரண்ட் வருமா தெரியாது, இந்த வருஷம் என்ன விளைச்சல் வரும் தெரியாது, என்ன விலை கிடைக்கும்னு தெரியாது "full of suspense" தான் எப்படி வசதி :-)) // ரசித்து சிரித்தேன்.

ராதாகிருஷ்ணன் said...

டோண்டு சார் - வருகைக்கு நன்றி.

//வேற வினையே வேண்டாம், இன்னும் கொஞ்ச நாளில் காது அவுட்டாகி விடும். பிறகு மற்றவர் பேசுவதை உதட்டைப் பார்த்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். கேலிக்கு சொல்லவில்லை, சீரியசாகவே சொல்கிறேன்.// நிறைய குறைத்து விட்டேன்.

//1. தினசரி ரொட்டீனை மாற்றுங்கள். செல்லும் ரூட்டை மாற்றுங்கள். // இதை ஒரு வருடமாக செய்து கொண்டுதான் உள்ளேன்.மொத்தம் நாலு ரூட்:-))

//2.புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். கணினியில்தான் பல பலே விஷயங்கள் நடக்கின்றனவே.// செவ்வனே நடந்து கொண்டுள்ளது.அதனால்தான் ரோலர் கோஸ்டர் பங்குசந்தை ஓட்டத்தில் தாக்குபிடிக்க முடிகிறது.மேலும்,அடிப்படை கணிப்பொறியறிவு மட்டுமே உள்ள நான் இன்று தட்டுதடுமாறி ஒரு பதிவு ஆரம்பித்து, உங்களை போன்ற அனுபவசாலிகளிடம் கருத்து பரிமாற்றம் செய்ய முடிகிறது.

கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

உங்க பதிவு சூப்பர்.ஒரு சராசரி "மென்பொருளாளனின்" வழக்கமான வாழ்க்கையை நச்னு சொல்லிட்டீங்க. இதுக்கே இப்படி சொல்றிங்களே. எனக்குத்தெரிந்த ஒருவர் அரசங்கத்தில் டைப்பிஸ்ட்டாவே வேலைக்குச் சேர்ந்து 30 வருடங்களுக்குமேல் வேலை செய்து டைப்பிஸ்ட்டவே ஓய்வு பெற்றாரே.அவருக்கெல்லாம் என்ன சொல்வீங்களோ? கிட்டத்தட்ட எல்லோருக்கும் வாழ்க்கை இப்படித்தான் போகும்போல.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
"full of suspense" தான் எப்படி வசதி :-))
==>
வவ்வால்,பின்றீங்க.ரசிக்கத்தக்க பதில்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

டோண்டு ,
உங்களுக்கு அமைந்த மாதிரி வேலைக்கு வேலை,சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யம்,சணடைக்கு சண்டை(ப்ளாக்கில்தான்),ஓய்வுக்கு ஓய்வு என்று இருந்துவிட்டால் நல்லாத்தான் இருக்கும். ஹும்.(பெருமூச்சு). எங்களுக்கு ஏதோ (இணைய)தமிழ் பத்திரிக்கைகள்,ப்ளாக் போன்றவை இருப்பதால் கொஞ்சம் பரவாயில்லை.சில நிறுவங்களில் இணையத்தை வடிகட்டி விடுவார்கள்.அப்போது அதுவும் செய்ய முடியாது.

ஆனால், எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

ராதாகிருஷ்ணன் said...

சாமான்யன் சிவா - // உங்க பதிவு சூப்பர்.ஒரு சராசரி "மென்பொருளாளனின்" வழக்கமான வாழ்க்கையை நச்னு சொல்லிட்டீங்க// வாங்க சிவா. என்னடா யாருமே துணைக்கு இல்லையேன்னு நினைச்சப்ப ஆதரவு கரம் நீட்டியதற்கு நன்றி.

மா சிவகுமார் said...

ராதாகிருஷ்ணன்,

நான் பல முறை யோசித்த விஷயம் குறித்த இடுகை.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு தொழிற்சாலைக்கு பயிற்சிக்குப் போயிருந்தேன். அங்கு ஒருவர் காலையில் சாப்பாடு கட்டிக் கொண்டு நல்ல உடை உடுத்து தொழிற்சாலைக்கு வந்து, நாள் முழுவதும் ஒரு இயந்திரத்தின் பின்னால் நின்று கொண்டு தோல்களை ஒவ்வொன்றாக போடும் வேலையைச் செய்வார். ஒரு வாரம் அவரைப் பார்த்தவுடன் பயமே வந்து விட்டது. இப்படியும் வாழ முடியுமா என்று!

எங்க அம்மா பள்ளி ஆசிரியர், வேலை சலிப்பதாக அலுத்துக் கொண்டதே இல்லை. அப்பா அரசுத் துறையில் வேலை பார்த்தார்கள், 5 ஆண்டுகளுக்கு முன்பே விருப்ப ஓய்வு வாங்கி விட்டார்கள், தாங்க முடியாத சலிப்பு.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நாம் செய்யும் வேலைக்குப் பின்னால் இருக்கும் மனித முகங்களை வாழ்வுகளை அவதானிக்க ஆரம்பித்து விட்டால் எவ்வளவு சலிப்பாகத் தோன்றும் வேலையும் சுவையானதாகி விடும். அதில் மேல்மேலும் நகரும் வழியும் கிடைத்து விடும்.

ராமகிருஷ்ணரின் குட்டிக் கதைகளில் ஒன்று. ஒரு விறகுவெட்டி காட்டுக்குப் போகிறார். காட்டின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் முனிவரிடம் 'நல்ல மரங்கள் எங்கு கிடைக்கும்' என்று கேட்கிறார். "உள்ளே உள்ளே போ" என்கிறார் முனிவர்.

உற்சாகமாக உள்ளே போனார் விறகுவெட்டி. நல்ல உயர்தர விறகுக்கான மரங்கள் கிடைத்தன. நல்ல காசு. அடுத்த முறை மரம் எடுக்க வரும் போது முனிவரின் சொற்களை நினைவு கூர்ந்து இன்னும் உள்ளே போனார் விறகு வெட்டி. வீடுகள் கட்ட, மரச்சாமான்கள் செய்யப் பயன்படும் அருமையான மரங்கள் இருந்தன. பல நாட்கள் கழித்து வரும் போது இன்னும் உள்ளே போகலாம் என்று போனால் சந்தன மரங்கள் இருந்தன. (அப்போதெல்லாம் சந்தன வீரப்பன் மட்டும்தான் வெட்ட முடியும் என்று இல்லை போலிருக்கிறது).

அவர் பெரும் பணக்காரராகி விட்டார்.

கதை சொல்வது என்னவென்றால், நம்் நிலையில் நிறைவுற்று நின்று விடக் கூடாது. தொழிலாக இருந்தாலும் சரி, படிப்பு, கலை, விளையாட்டு, சமூக அறிவியலாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, தனி மனிதனோ, சமூகமோ மேலும் மேலும் மேம்பட முயற்சிக்க வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்

ராதாகிருஷ்ணன் said...

மா.சி,

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Post a Comment