Sunday, December 30, 2007

பன்னிரண்டு வருட நட்புக்கு சாவுமணி!!

நண்பா! கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியவில்லை,நம் நட்புக்கு இன்னும் சில தினங்களில் முடிவுரை.

எத்தனை வருட பழக்கம் நமக்குள், சுமார் பன்னிரண்டு வருடங்கள்.கல்லூரியில் ஆரம்பித்த நட்பு இப்போது திடீரென முடிய போகிறது என நினைக்கும் போது துக்கம் தொண்டை அடைக்கிறது.

யோசித்து பார்க்கிறேன்.இந்த பன்னிரண்டு ஆண்டுகளில்,

நிலையில்லா சந்தோஷம் வந்த போதும் உன்னிடம்தான் பகிர்ந்தேன்

மனமுடைந்த சோக தருணங்களிலும் நீதான் மனதை தேற்றினாய்

தேவையில்லாத குழப்பங்கள் மனதை வாட்டிய போதும் நீதான் குழப்பங்கள் தீர்த்து தெளிவான சிந்தனை தந்தாய்

என் மீது பலமுனை தாக்குதல்கள் பல பக்கங்களிலிருந்து வந்த போதும், நீதான் தைரியம் தந்தாய்

எனக்கென்று நண்பர்கள் யாரும் கிடையாது.எல்லா நேரங்களிலும் உன்னிடம்தான் ஓடி வந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் நீ எனக்களித்த நட்பை,அரவணைப்பை யாரும் எனக்கு தந்ததுமில்லை, கண்டிப்பாக இனி யாரும் தரவும் முடியாது.

நாமுண்டு நம் நட்புண்டு என்றிருந்தோம் என் திருமணம் வரை.என் மனைவி உன்னை இவ்வளவு வெறுப்பாள் என நான் நிச்சயம் எண்ண வில்லை.நம் நட்பு தொடர கூடாதென இந்த இரண்டு ஆண்டுகளாய் அவள் என்னிடம் சண்டை போடாத நாளில்லை.கல்லூரி முடிந்து நான் புதிதாய் அலுவலத்தில் சேர்ந்த புதிதில்,தினமும் குறைந்தது பத்து தடவையாவது சந்திப்போம் இல்லையா..ம்ம்ம் அதெல்லாம் பொற்காலம்.நீ இருந்ததால்தான் இரவு பகலாக உழைத்தாலும் என்னால் புத்துணர்ச்சி கொள்ள முடிந்தது( அதெல்லாம் சும்மா உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கீறீர்கள் என்கிறாள் என் மனைவி).என் திருமணத்துக்கு பின் நம் சந்திப்பு நான்கைந்து முறைதான் என்ற நிலைக்கு தள்ள பட்டோம்.நாளடைவில் என் மனைவி சம்மதம் இல்லாமல் உன்னை பார்க்கவே முடியாது என்ற நிலையில், இப்போதெல்லாம் வாரம் ஒரு முறை உன்னை பார்ப்பதற்கே நான் தலைகீழாய் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது.

இனியும் இந்த நிலை வேண்டாம்.என் மனைவியிடம் நம் நட்பை முறித்து கொள்கிறேன் என்று சத்தியம் செய்து விட்டேன்.உன்னிடம் சொல்ல கஷ்டமாகத்தான் உள்ளது.இனி நாம் சந்திக்க வேண்டாம். நான், 2007ம் ஆண்டுக்கு மட்டுமல்ல, நம் நட்புக்கும் விடை தருகிறேன்.என்னால் முடியுமா என தெரியவில்லை ஆனால் வேறு வழியில்லை நண்பா!

பன்னிரண்டு வருடங்களாய் என்னுடன் தினமும் இருந்த என் உயிர் நண்பனே, அடி மனதில் இருந்து சொல்கிறேன், உன் போல் ஒரு துணை எனக்கு நிச்சயம் இனி கிடையாது.கண்ணீர் துளிகளுடன் விடை தருகிறேன்!! போய் வா நண்பா!

கடைசி முறை உன் பேரை அழுத்தமாக உச்சரிக்க ஆசை..................

கோல்ட் பிளேக் கிங்ஸ்

ஆஹா! என்ன ஒரு ஆனந்தம் பேர் சொல்லும் போதே..பை பை நண்பா!!!!

10 comments:

Anonymous said...

ஹா ஹா.

நச் கதை போட்டி எல்லாம் முடிஞ்சி போச்சு அண்ணாத்தே! ;)

RK said...

அனானி அண்ணாச்சி,

போட்டிக்கு அனுப்புற அளவுக்கு எல்லாம் நம்மகிட்ட சரக்கு கிடையாது.இது உண்மையாலுமே நம்ம சொந்த சோகக்கதை:(

Aruna said...

சூப்பருங்கோ! என்னடா நட்புக்கு வந்த சோதனைன்னு ஒரு கணம் மலைச்சுப் போயிட்டேன்!
அருணா

RK said...

வாங்க அருணா,

நம்ம ஏரியாவுக்கு முதல் தடவை வந்துள்ளீர்கள்.நல்வரவு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

உங்களை ஒரு TAG விளையாடுக்கு அழைத்திருக்கிறேன்

நன்றி

மங்களூர் சிவா said...

நன்றி நண்பா 'கோல்ட் ப்ளேக் கிங்ஸ்' நல்ல முடிவு. நல்ல வேளை வெல்கம் நண்பா 555 ன முடிக்கலையே !!!
அவ்வ்வ்வ்வ்வ்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்ல ட்விஸ்ட்.
பெண்ணீய பதிவர்களுக்கு கும்மியடிக்க நல்ல வாய்ப்புன்னு நினைச்சேன்.
ஏமாந்திட்டேன் =)

ILA (a) இளா said...

கவலையே படவேணாம், உங்க நட்பு கண்டிப்பா தொடரும். அதுக்கு எல்லாம் சிபியை உதாரணமா வெச்சுக்கலாம்.

RK said...

ILA(a)இளா - கட்டுப்பாட்டோட இருக்கோம்ல :)

cheena (சீனா) said...

கோல்ட் ப்ளேக் கிங்ஸ் நட்பே 12 வருசத்துலேயே முறிச்சாச்சா - அதுவும் பொண்டாட்டி சொல்லி - ஷேம் ஷேம்

Post a Comment