Monday, July 05, 2010

நகுலனின் பார்வையில் வாழ்க்கை(அ) மரணம்

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

- நகுலன்

இவ்வளவு எளியதுதானே வாழ்க்கை..இதுக்குதானே இவ்வளவு ஆட்டமும்,ஓட்டமும்.ஆனால்,மனசு புத்தியை அடக்கமாட்டேங்குதே...

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

சாப்பாடு என்று ஒன்று இருக்கிறதே.

இந்த சாப்பாடு, வெற்றிலை, சுண்ணாம்பு, பிராந்தி வாங்க காசு வேண்டுமே, காசிற்கு தானே இவ்வளவு போராட்டம், நடிப்பு, பொய்யான நடிப்பு எல்லாம்

எல்லாம் இலவசமாகா அரசாங்கம் கொடுத்தல் நாம், பதிவு எழுதுதலையும் , பின்னூட்டம் இடலையும், பாசெபூக் பார்ப்பதையுமே முழுநேர தொழிலாகவே கொள்வோமே.

ராகின் said...

ராம்ஜி,

மனசு சொல்லுது

சாப்பாடு,பிராந்தி,இத்யாதிக்கெல்லாம் ஐந்திலக்க/ ஆறிலக்க சம்பாத்தியம் தேவை இல்லையே..மனசுக்கு பிடிச்ச ஊர்ல காலாட்டிகிட்டு சம்பாதிக்கற நாலு இலக்க சம்பளம் போதுமே..

புத்தி சொல்லுது

காரு,பங்களான்னு அலைஞ்சு திரிஞ்சு சம்பாதிச்சுட்டு கடைசில நகுலன் சொன்ன பட்டியலை அனுபவிப்போம்னு...

Post a Comment