சோம்பலான மழையும், சில்லிப்பான மதியமுமான இந்த நேரத்தில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்த இந்த மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதையை தேடி எடுத்தேன்.. எப்பொழுதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்பொழுதெல்லாம் இந்த கவிதை நினைவுக்கு வந்து விடும்.......
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்
குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்
நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்
கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.
ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது
செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்
வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்
பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்
வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.
எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை
- மனுஷ்ய புத்திரன்
15 comments:
Good one. Thanks for Sharing.
பகிர்வுக்கு நன்றி
நல்ல கவிதைகளை பொருத்தமான தருணத்தில் பொருத்துகிறீர்கள். பகிர்விற்கு நன்றி!
@செல்வராஜ் ஜெகதீசன்,
தங்களின் “இயல்பாய் இருப்பதில்” கவிதையில் என்னை நான் உணர்ந்தேன்.. எனது புக்மார்க்கில் நீண்ட நாட்களாக உள்ள கவிதை அது..
@ சரவண வடிவேல்,
நன்றி.
@பா.ரா,
நன்றி
தக்க இடத்தில் பொருத்தவும், பொருந்தவும்தானே கவிதைகள் :)
தங்களின் அப்பாவின் பற்றிய பதிவினை(புரை ஏறும் மனிதர்கள்-இரண்டு) இப்பொழுதுதான் நண்பர்களுக்கு மெயில் பண்ணினேன்..
hi AZ,
Wish You and Family a Very Happy and Prosperous New Year!
hi mok,
thanks senior.. hearty wishes for a great year :)
arumaiyaana varikalai thedi pidiththu koduththirukkireerkal, nanri
@முரளிகுமார் பத்மநாபன்,
நன்றி!
அருமையான வார்த்தைகள் என்பதால்தான்,மழை கண்டதும் தேடி எடுக்க சொன்னது.. :)
நல்ல பகிர்வு :)
@நேசமித்ரன்,
பா.ராவின் பதிவுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, சில சமயம் உங்கள் பின்னூட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று விடுகின்றன :)
வருகைக்கு நன்றி
நண்பரே
இன்று தான் உங்கள் தளம் பார்த்தேன்,
நீங்கள் டிசம்பரில் அக்கரைச்சீமையில் கேள்வி கேட்டதை இன்று தான் பார்த்தேன்.
உலக சினிமா தரவிறக்க தளங்கள்:-
http://www.kickasstorrents.com/
http://torrentz.eu
http://fenopy.com/
http://www.torrents.net/
http://bitsnoop.com/
http://www.torrenthound.com/
மனுஷ்யபுத்திரன் கவிதைமழை அருமை
@கீதப்பிரியன்,
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தகவல்கள் அளித்தமைக்கு நன்றிகள் பல :)
நண்பரே !
இது முதல் முறையாக தமிழில் தட்டச்சு செய்ய முயற்சிக்கிறேன் ...
பரவயில்லையே கொஞ்சம் கொஞ்சம் முடியுதே!
விடியறதுக்குள் ஐந்து வரி எழுதிடலாமா ...
ஐயா தங்கள் கட்டுரை படிக்கும்பொழுது எவ்வளவு திறமை இந்த மனிதருக்குள் மறைந்திருக்கிறது என்பது தெரிகிறது, :)
வாழ்க வளமுடன்!
நல்ல பகிர்வு :)
Post a Comment