அம்பானி பிரதர்ஸ் சரித்திரம் படைக்கிறார்கள்.பங்குச்சந்தை பாய்ச்சல் காரணமாக முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் நிறுவன பங்குகள் மேல்நோக்கி பறந்த வண்ணம் உள்ளன.செவ்வாய்க்கிழமை முடிந்த பங்குச்சந்தை நிலவரப்படி, அம்பானி சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் மூன்று இலட்சத்து இருபத்து நான்கு கோடிகள் என கணக்கிடப்பட்டுள்ளது ( விரல் விட்டு கணக்கு பண்ணாதிங்க! ரிஸ்க்கு!!). இது உலக மகா பணக்காரர்கள் பில்கேட்ஸ் மற்றும் கார்லோஸ் ஸிலிம்மின் சொத்து மதிப்பை விட அதிகம்.மேலும் இது நம் நாட்டின் GDP ல் சுமார் எட்டு சதவீதமாகும்.
மேலும் முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் பணக்காரரான லஷ்மி மிட்டலை(வெளிநாட்டு வாழ் இந்தியர்)தொட்டு விடும் நிலையில் உள்ளார்(பங்குச்சந்தை கை கொடுப்போம் என நம்புவோமாக!).
முகேஷின் தற்போதைய சொத்து மதிப்பு - ஒரு இலட்சத்து எண்பத்து நான்கு கோடிகள்
அனிலின் தற்போதைய சொத்து மதிப்பு - ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடிகள்
வாழ்க நம் பங்குச்சந்தை!!
தகவல்: எக்கானமிக் டைம்ஸ்
8 comments:
//
வாழ்க நம் பங்குச்சந்தை!!
//
ரிப்பீட்டேய்
http://mangaloresiva.blogspot.com/
வாங்க சிவா,கருத்துக்கு நன்றி
Wov
முகேஷ் அம்பானி போன வாரமே மிட்டல தாண்டி உலகின் மூணாவது பெரிய பணக்காரரா ஆயிட்டாரு. ஆனா இது நிலையில்லாதது என்று இன்றைய சந்தை நிரூபித்துவிட்டது.
//Wov//
சதுக்கபூதம் - வாங்க நல்வரவு
அனானி- //முகேஷ் அம்பானி போன வாரமே மிட்டல தாண்டி உலகின் மூணாவது பெரிய பணக்காரரா ஆயிட்டாரு. ஆனா இது நிலையில்லாதது என்று இன்றைய சந்தை நிரூபித்துவிட்டது//- இது நிலையில்லாதது என்பது எழுதும் போதே தெரியும்.இருந்தாலும் நமக்கு ஒரு அல்ப சந்தோஷம்தான்!!
பங்குச்சந்தை உயர்வோட உற்பத்தியும் அதிகரிச்சா மட்டுமே நிரந்தர உயர்வுன்னு பதிவர் யாரோ சத்தம் போட்டு சொன்னமாதிரி காதுல மெல்லக் கேட்டது.
சந்தை மட்டுமே தெரிந்த எனக்கு பங்குசந்தையை தெரிய வைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
ரவி
சந்தை மட்டுமே தெரிந்த எனக்கு பங்குசந்தையை தெரிய வைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ரவி
Post a Comment