Wednesday, October 17, 2007

பக்கத்து சீட்ல சனி!

ஆகா..இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா..பதிவெழுதறதை
பத்திதாங்க சொல்றேன்..சரி நாமளும் வேலு நாயக்கர் மாதிரி
நாலு பேருக்கு நல்லது சொல்வோம்னு பார்த்தா,ஒரு வாரமா
ஒண்ணுமே தோண மாட்டேங்குது.இதை பத்தியே யோசிச்சுகிட்டு
இருக்கறதால வீட்ல ஏங்க தீடீர்னு கஜினி மாதிரி ஆகிட்டீங்கன்னு
வேற கவலை பட ஆரம்பிச்சுட்டாங்க.

ரொம்ப யோசிச்சு,கடைசியா ஒரு அப்பாவி(வேற யாரு நாமதான்!)
பங்குசந்தையில பட்ட அனுபவங்களை அதாவது நொந்து நூலான,
அந்து அவியலாகி நூடுல்ஸான கதையை சொல்வோம்னு முடிவு பண்ணியாச்சு.
இன்னைக்கு இருக்கிற மேடு பள்ளமான பங்குசந்தை ஓட்டத்துல,
என் கதை பொருத்தமா இருக்கும்னு தோணுது.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அதாவது அக்டோபர் 2005,நம்ம
மும்பை தலைமை அதிகாரியோட மதிய உணவுல இருந்தப்ப
சேமிப்பெல்லாம் எங்க எப்படி பண்றீங்கன்னு கேட்டாரு.
அப்படியெல்லாம் ஒரு கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொல்ல,
அவர் நம்மளை ஏதோ அவர் பேண்ட்ல நம்ம சூப்பை ஊத்துன
மாதிரி ஒரு பார்வை பார்த்துட்டு,உருப்படியா ஏதாவது பரஸ்பர
நிதில பணம் போட்டு வைக்க அறிவுரை சொன்னாரு.நாம அந்த
வார்த்தையை நிறைய தடவை விளம்பரங்கள்ல கேள்விப்
பட்டிருந்தாலும்,அதெல்லாம் ஏதோ படிச்சவங்க விவகாரம்னு
விலகி போனதால,அவரையே பரஸ்பர நிதி பத்தி விளக்க
சொன்னேன்..அவரும் சூப் ஆர்டர் பண்ணதுல இருந்து பில்
செட்டில் பண்ற வரைக்கும் விளக்கு விளக்குன்னு விளக்குனாலும்
நம்ம கற்பூர புத்திக்கு ஒண்ணே ஒண்ணுதான் விளங்குச்சு.பரஸ்பர
நிதி,பங்கு சந்தைல நிறைய பணம் முதலீடு செஞ்சு
சம்பாதிக்கறாங்க.அப்பத்தான் நமக்கு பல்பு எரிஞ்சு,நாமளே ஏன்
பங்குச்சந்தைல முதலீடு செய்ய கூடாதுன்னு உள்ளே இருந்து
சிங்கம் குரல் கொடுத்தது(சனி பகவான் நம்ம பக்கத்துல வந்து
பக்காவா செட்டில் ஆனது அப்பதான்னு நினைக்கிறேன்).அன்னைக்கு
தேதிக்கு நமக்கு ஷேர்மார்க்கெட் அப்படிங்கற வார்த்தைக்கு
ஸ்பெல்லிங் தவிர வேற எதுவுமே பங்குச்சந்தை பத்தி தெரியாது.
தப்பி தவறி சேனல் மாத்தறப்போ CNBC அல்லது NDTV profit
பார்த்தால் கூட டெலிஷாப்பிங் புரோகிராம் பார்த்தா எப்படி
எகிறுவோனோ அதே ரேஞ்சுல சேனல் மாறிடுவேன்.

பங்குச்சந்தை பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சப்போ பண்ண அலப்பறை
இருக்கு பாருங்க..சிட்டி பேங்க் சீப் மாதிரி காலைல எக்கானமிக்
டைம்ஸ்லதான் கண்முழிக்கறது.காலைல டிபன்
"ndtv பிரேக் பாஸ்ட் வித் பிராபிட்"உடன்தான்.டின்னர்,
"CNBC இந்தியா பிசினஸ் அவர் பார்த்துக்கிட்டேதான்னு
(வீட்ல கோலங்கள் போச்சேங்கற முறைப்பையெல்லாம் மீறிதான்)
நம்ம லைப்பே மாறிடுச்சு.கொஞ்சம் கொஞ்சம் அப்பதான் நமக்கு
நாட்டுல தொழில் துறைல என்ன நடக்குது,பெரிய மனுசங்க யாரு,
ஏர்டெல்,பஜாஜ் இன்னும் பிற கம்பெனி ஓனர்லாம் யாரு
அப்படின்னு விளஙக ஆரம்பிச்சது.அப்பதான் எனக்கு,வள்ளியப்பன்
அவர்கள் எழுதின "அள்ள அள்ள பணம்" படிக்க வாய்ப்பு கிடைச்சது.
ஒரே சிட்டிங்கில் படிச்ச சில புத்தகங்கள்ல அதுவும் ஒண்ணு.அப்புறம்
கொஞ்சம் விஷயம் தெளிவாச்சு.இதெல்லாம் நடக்கிறப்போ
பிப்ரவரி 2006.கை பரபரக்க ஆரம்பிச்சுருச்சு.அதுவுமில்லாம,
அக்டோபர் 2005ல 8000+ ல இருந்த சென்செக்ஸ் பிப்ரவரி 2006ல
10000+ தாண்டின உடனே உள்ளே இருந்த சிங்கம் வேற ஏதாவது
பண்ண சொல்லி உரும ஆரம்பிச்சுட்டாரு.

சரி களம் இறங்கலாம்னு முடிவு பண்ணி,பத்தாயிரம் ரூபாயோட
நம்ம சனி பகவான் துணையோட பங்குசந்தைல கால் வைச்சேன்..

கொஞ்சம் பொறுங்களேன் வந்துடறேன்( ஆமா பெரிய சுஜாதா,
சஸ்பென்ஸ் வைக்கிறேன்னு நினைக்காதீங்க..உண்மையிலயே
தமிங்கலீஷ் டைப் ரைட்டிங்ல விரல் வலிக்குதுங்க).

14 comments:

theevu said...

உங்க தலைப்பே அபாரம்.

எழுதுங்க..

இம்சை said...

Same Blood.....

RK said...

தீவு - மிக்க நன்றி

RK said...

இம்சை - நிறைய சேம் பிளட் இருப்பாங்க..கவலை படாதிங்க பிரதர்..வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

அடி கொஞ்சம் ஓவரோ.

சின்ன சின்ன தப்புகள்லயே நிறைய கத்துக்கனும்.

நீங்க அக்டோபர் 2005, நான் ஆகஸ்ட் 2005 ல தான் ஸ்டார்ட் பண்ணினேன்.

நீங்க சொன்ன அலப்பரை எல்லாம் இன்னைக்கும் பண்ணிகிட்டுதான் இருக்கேன். but I made money.

உங்க ரெண்டாவது பாகத்தை சொல்லுங்க எங்க தப்பு பண்ணினீங்கன்னு சொல்றேன்.

கண்டிப்பா நீங்க எங்க தப்பு பண்ணீங்கன்ன்னு மத்தவங்களை விட உங்களுக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சிருக்கும்.

THINK BIG

RK said...

//அடி கொஞ்சம் ஓவரோ// அடி கொஞ்சம்தான்..ஆனால் கிடைத்த அனுபவங்கள் ஏராளம்

//சின்ன சின்ன தப்புகள்லயே நிறைய கத்துக்கனும்// - என்னதான் கத்துக்கிட்டாலும், சில சமயங்கள்ள அனுபவ அறிவு சொல்றத ஆசை மனசு கேக்க மாட்டேங்குதே..இங்கதானே பங்கு சந்தை சூட்சுமமே இருக்கு

//நீங்க சொன்ன அலப்பரை எல்லாம் இன்னைக்கும் பண்ணிகிட்டுதான் இருக்கேன். but I made money// அலப்பரைக்கு இன்னும் குறைச்சல் இல்லை but I haven't made money

//உங்க ரெண்டாவது பாகத்தை சொல்லுங்க எங்க தப்பு பண்ணினீங்கன்னு சொல்றேன்// வந்துகிட்டே இருக்கோம்

சிவா - வருகைக்கு நன்றி

Anonymous said...

நான் சந்தையில இறங்குனது சனவரி 2006ல். சிறு சிறு காயங்கள், ஏமாற்றங்கள் இருந்தாலும் மொத்ததுல நல்ல அனுபவம். நல்ல வரவும்தான்.

என்னோடது திராவிடோட பாணி. day trading, futures, options, margins, short, long ஒண்ணும் கிடையாது. ஒன்லி investment. முக்கியமா MF பக்கம் போறதே இல்ல.

மங்களூர் சிவா said...

http://mangaloresiva.blogspot.com

தென்றல் said...

ராதாகிருஷ்ணன்,

சீரியசான விசயத்தை ஜாலியா.. அழகாக... சொல்றீங்க..

/நாமளும் வேலு நாயக்கர் மாதிரி
நாலு பேருக்கு நல்லது சொல்வோம்னு பார்த்தா,/

நீங்க 'நல்லவரு'தான்!

Radha Sriram said...

நல்ல ஆரம்பம்..நகைச்சுவையும் நல்லா இருக்கு.....இரண்டாவது பாகத்துக்கு waiting....!!

RK said...

//என்னோடது திராவிடோட பாணி.
day trading, futures, options, margins, short, long
ஒண்ணும் கிடையாது. ஒன்லி
investment. முக்கியமா MF பக்கம்
போறதே இல்ல//

wettre - ஒவ்வொருத்தருக்கும் ஒரு
பாணி..மொத்தத்துல வரவுன்னா
சந்தோஷந்தான்

RK said...

//சீரியசான விசயத்தை ஜாலியா..
அழகாக... சொல்றீங்க..//
//நீங்க 'நல்லவரு'தான்//

தென்றல் - ரொம்ப புகழாதிங்க.
உங்க பதிவையும்,பங்கு வணிகம்
பதிவையும் ,மிஸ் பண்றதே
கிடையாது.

RK said...

//நல்ல ஆரம்பம்..நகைச்சுவையும்
நல்லா இருக்கு.....இரண்டாவது
பாகத்துக்கு waiting....!!//

radhasriram - கருத்துக்கு நன்றி..
விரைவில் எழுதுகிறேன்

mo h said...

நண்பா
அட இது எங்கோயோ கேட்ட மாதிரி இருக்குதுங்கோனு பார்த்தாக்க ,,, நாம எல்லோருமே இந்த அனுபவம் வழியாக வந்தது ஜாபகம் வருதே ஜாபகம் வருதே :))
நல்லதொரு கட்டுரை, நடைமுறை மொழியில் ...
அதுவும் 2 007 அக்டோபர் .... கரடிபிடிக்கு போகிறது தெரியாத நேரம்!
நீங்க நல்ல இருக்கோணும் மார்க்கெட் முன்னேற ...

Post a Comment