Saturday, October 13, 2007

ஹைய்யா!! ஜில்லுன்னு ஒரு பீலிங்

ஹைய்யா!! எனது இடுகைகள் தமிழ்மணத்தில் தெரிகின்றன..உஸ்ஸ்ஸ் அப்பா, இன்னைக்கு ராத்திரி விளக்கை போட்டுக்கிட்டு பொட்டியை பிராண்டி வீட்ல அர்ச்சனை வாங்க வேண்டியதில்லை..

இலவசகொத்தனார் சார், நீங்கதான் ரிப்பன் வெட்டி நம்ம கடைல முதல்போணி(முதல் மறுமொழி)..ரொம்ப நாளைக்கு பிளாக்குல நிக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க..

ஆனா சும்மா சொல்லக்கூடாது..ஒரு வாரமா கஷ்டப்பட்டு,பதிவை எழுதி,போஸ்ட் பண்ணி, அது தமிழ்மணம்,தேன்கூடு எங்கேயுமே காணக்கிடைக்காம,ஏங்கிப்போய், திடீர்னு அது தமிழ்மணத்துல கண்ல தட்டுப்பட்டு, உடனே அதுல இலவசகொத்தனாரோட மறுமொழியையும் பாத்த உடனே அடிவயித்துல சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வருது பாருங்க..என்னோட வீட்டுகாரம்மாவை பெண் பார்த்துட்டு வந்த அடுத்த நாள் தொலைபேசில அவங்க குரலை கேட்ட உடனே ஒரு ஜில் வந்ததுங்க..அதே பீலிங்ப்பா இப்ப..

13 comments:

ILA(a)இளா said...

ரொம்ப பீலிங் ஆகிட்டீங்களா? இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க. நிறைய பீல் ஆவீங்க

ராதாகிருஷ்ணன் said...

தங்கள் வருகை என் பாக்கியம்..

நீங்கதான் என் பதிவுலக ரெண்டாவது போணி..இலவசம் வந்து முதல் மறூமொழியை வேறு ஒரு பதிவுக்கு கொடுத்து என் பதிவுலக பிரவேசத்தை ஆரம்பிச்சு வைச்சுட்டாரு.வ.வா.சங்கத்துல இருந்து வர எல்லோருக்கும் என் நன்றிகள் பல!!

கிட்டதட்ட ஒருவருடமாக எல்லா பதிவையும் பார்த்து நிறைய பீல் பண்ணியாச்சு..இன்னும் பண்ணுவோம்..ரேகிங்லாம் பண்ண மாட்டீங்கன்னு நம்பறேன்..

பி.கு: உங்க கவர்சீ படம் எனக்கு ரொம்ப பிடிச்சுது

இராம்/Raam said...

வாங்க.... வாங்க.... :)

cheena (சீனா) said...

நானும் தமிழ் மணத்திலே இணைஞ்சாச்சு - இடுகை எல்லாம் தெரியுது - ஆனா இந்த கருவி பட்டை கருவி பட்டைனு சொல்ராங்களே - அது தான் தண்ணி காட்டுது - வரவே மாட்டேங்குது - என்ன செய்யலாம்

வடுவூர் குமார் said...

சே! இளா நீங்க சுத்த மோசம்..நான் நினைத்தை அப்படியே போட்டுவிட்டீர்கள்.
ராதா கிருஸ்ஹ்ணன்,வலையுலகுக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்கீங்க. தமிழ்மணத்துல எனக்கு வந்த பின்னூட்டம் எல்லாம் பதிவு மாதிரி தெரிய, புது ப்ளாக் ஆரம்பிச்சது எங்கதை. நிறைய எழுதுங்க‌

மங்களூர் சிவா said...

உங்க ஜில்லுனு இருக்குற பீலிங்ல நானும் ரெண்டு ஐஸ் க்யூப் போடறேன்.

எதோ என்னால முடிஞ்சது

மங்களூர் சிவா said...

//
வ.வா.சங்கத்துல இருந்து வர எல்லோருக்கும் என் நன்றிகள் பல!!
//
அங்கிருந்து வராத மத்தவங்களுக்கு, அதாவது எனக்கு!?!?!?!?!

ராதாகிருஷ்ணன் said...

ராம் - நன்றி

சீனா - நீங்களும் நம்ம கட்சிதானா.தமிழ்மணத்தின் அறிவுரைபடி நிரல்துண்டை சரியா ஒத்தி இருந்தீங்கன்னா,கருவிப்பட்டை தெரியும்.எனக்கும் முதலில் தெரியவில்லை.ஆனால் இடுகை தமிழ்மணத்தில் தெரிந்தவுடன் அதை கிளிக்கியவுடன் எனது பதிவு பட்டையுடன் தெரிந்தது

ராதாகிருஷ்ணன் said...

வடுவூர் குமார், வருகைக்கு நன்றி.

சின்ன அம்மிணி,நன்றி.நிறைய இல்லாவிடினும் முடிந்த அளவு எழுத முயற்சிக்கிறேன்

மங்களூர் சிவா,ஏற்கனவே இங்க மழை.ஐஸ் க்யூப்லாம் போட்டு ஜலதோஷம் பிடிச்சுற போகுது.வா.வா.சங்கம் மற்றும் non வா.வா.சங்கம் என பாகுபாடின்றி அனைவரையும் வரவேற்கிறென்

மங்களூர் சிவா said...

//
மங்களூர் சிவா,ஏற்கனவே இங்க மழை.ஐஸ் க்யூப்லாம் போட்டு ஜலதோஷம் பிடிச்சுற போகுது.வா.வா.சங்கம் மற்றும் non வா.வா.சங்கம் என பாகுபாடின்றி அனைவரையும் வரவேற்கிறென்
//
அது (நம்ம அஜித் ஸ்டைல்ல படிச்சிக்கங்க)

தென்றல் said...

[வாழ்த்துக்கள்!!]

//இது நம்ம ஏரியா! //

உள்ள வரலாமா?!?

ராதாகிருஷ்ணன் said...

//உள்ள வரலாமா?!?// தென்றல்,அதான் நம்ம ஏரியான்னு போர்ட் போட்டாச்சே..எல்லோருக்கும் நல்வரவே..

Post a Comment