Thursday, October 18, 2007

பக்கத்து சீட்ல சனி!! ( தொடர்ச்சி)

ஒருவழியா பத்தாயிரம் ரூபாயோட பங்குசந்தைல
கால்வைச்சேன்.( பிளாஷ்பேக் இங்கே)

என்னோட புரோக்கர் மெயில்ல அனுப்பற
பரிந்துரைல இருந்து ஒரு ஸ்டாக்கை செலக்ட்
பண்ணி வாங்கினேன்.அந்த ஸ்டாக்கை நான்
வாங்கின அப்புறம், என் அளவுக்கு
NSE வெப்சைட்டை ரீபிரெஷ் பண்ணவங்க யாரும்
இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.நிமிஷத்துக்கு
ஒரு தடவை என் ஷேர் எவ்வளவு ஏறி இருக்குன்னு
பார்த்துக்கிட்டே இருப்பேன்.அது என்னமோ தெரியலை,
10000+ ல இருந்த சென்செக்ஸ் 12000+ ஆனாலும் என்
ஷேர் மட்டும் நாட்டாமை மாதிரியே( அதாங்க என்னைக்கும்
ஒரே சொல்லுன்னு சொல்வாருல்ல..அதே மாதிரி
நம்ம ஷேரும் என்னைக்கும் ஒரே ரேட்டுதான்) இருந்தது.

நாம டென்ஷனாகி ஒரு நூறு ரூபா லாபத்துல
வித்துட்டு வெளிய வந்தாச்சு..வித்ததுக்கு அப்புறம்
contract note பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது
லாபம் நூறு ரூபா இல்ல வெறும் பதினாலு ரூபான்னு.

சரி இதெல்லாம் ஒரு அனுபவம் மனசை தளர
விடாதன்னு பக்கத்து சீட்ல இருந்து சனி பகவான்
குரல் கொடுத்தார்.அப்பதான் உள்ளே இருந்து சிங்கம்
குரல் விட்டாரு.நமக்கு இதெல்லாம் சரிப்படாதுப்பா..
வா..day trading பண்ணுவோம்னாரு..இது நடக்கறது..ஏப்ரல் 2005.
சரின்னு புரோக்கர் கொடுத்த மெயில்ல ரிதமிங்கா
இருந்த ஒரு ஷேரை செலக்ட் பண்ணி ஒரு டிரேட் பண்ணதுல
ஒரே நாள்ல ஏழாயிரம் லாபம்.உள்ளேர்ந்து "அதான்
சொன்னோம்ல" அப்படின்னு குரல் வந்தது.

இங்க ஆரம்பிச்சதுங்க வினை..அதுக்கப்புறம் கண்ணு
மண்ணு தெரியாம day trading தான்..சம்பந்தமில்லாம ஒரு
கம்பெனியை வாங்கி வைச்சுக்கிட்டு நாள் பூரா
பார்த்துக்கிட்டே இருந்தா,அது என்னமோ நாம
வாங்கறதுக்கினே காத்துக்கிட்டு இருந்த மாதிரி,
ரிவர்ஸ் கியர்ல அப்படி பறக்கும்..ஆனா இப்ப நினைச்சு பார்க்கிறேன்,நாமல்லாம் வீரபரம்பரைங்க,,பின்ன அதெல்லாம்
பார்த்துக்கிட்டு அசராம இருந்துருக்கோம்ல.

இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தப்ப லாபமும் இருந்தது,
நஷ்டமும் இருந்தது.ஆனா இன்னைக்கு வரைக்கும்
நஷ்டம்தான் ஞாபகத்துல இருக்குது.அப்படின்னா,லாபம்
எவ்வளவுன்னு சொல்ல வேண்டியதில்லை.

எங்கேயோ,எதையோ படிச்சதுக்கப்புறம்,historical price movement
பார்த்து ஷேர் வாங்குவோம்னு முடிவு பண்ணிணேன்.இப்பயும்,
நம்ம புரோக்கர் கொடுத்த பரிந்துரைல இருந்து ஒரு
ஸ்டாக்கை செலக்ட் பண்ணோம்.ஏன்னா,Rs.325 இருந்த
ஸ்டாக்குக்கு Rs.450 டார்கெட் கொடுத்து இருந்தாங்க.
2006,மே-10ம் தேதின்னு நினைக்கிறேன்..இந்த ஷேரை
வாங்கினேன்.எத்தனை மணிக்கு தெரியுமா? 3.20க்கு.எப்படி
வாங்கினேன் தெரியுமா? மார்ஜின் டிரேட்ல.ஏன் தெரியுமா?
நாலு நாளா அந்த ஷேர் ரொம்ப ஊசாலட்டத்துல ஏறுறதும்,
இறங்கறதுமா இருந்தது.நம்ம ஐடியா என்னன்னா,நாம
முதல் நாள் குறைஞ்ச விலைக்கு வாங்கி, ரெண்டு நாள்
கழிச்சு விலை ஏறியதுக்கப்புறம் வித்துடாலாம்னு.

நான் Rs.324க்கு அந்த ஷேரை வாங்கிட்டு, ரெண்டு நாளா
அந்த பக்கமே எட்டி பார்க்கலை.அப்புறம் பார்த்தா, நம்ம
ஷேர் விலை Rs.280க்கு இருந்தது.அப்பவும் நமக்கு நினைப்பு
என்னன்னா,Rs.380வரைக்கும் ஏற்கனவே போயிருந்த ஷேர்
நம்மளை மோசம் பண்ணாது,கண்டிப்பா ரெண்டு நாள்ல
சரியா போயிரும்னு.மே-18,2006- நம்ம சந்தை அடிச்சது
பாருங்க ஒரு அந்தர் பல்டி( சென்செக்ஸ் சுமார் 800
புள்ளிகளை இழந்தது).சரி,நம்ம சூப்பர் பெர்பார்மர் எந்த
நிலைமைல இருக்காருன்னு பார்த்தா,எனக்கே
சந்தேகமாயிருச்சு,நம்ம ஷேரோட ரேட்தானா இதுன்னு.பின்ன,
நம்மாளு,Rs.324 ல இருந்து Rs.220க்கு போயிட்டாருல்ல.
அன்னைக்கு நம்ம காதுல புகை வந்த மாதிரி,என்னைக்குமே
வந்ததுல்லைங்க.நமக்கு நம்ம பாசக்கார ஷேரை விட
மனசில்லாததால,வீட்டம்மாகிட்டே கெஞ்சி கூத்தாடி டப்பு
ரெடி பண்ணி டெலிவரி எடுத்துட்டேன்.

நம்ம சிங்கம் உள்ளேர்ந்து,கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னாரு.
அப்புறம் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும்,day trading
பண்ண ஆரம்பிச்சோம்.பழைய கதைதான்..ஆனா என்ன இப்ப
கொஞ்சம் large cap and most trading counters ல மட்டும்.பெரிசா
லாபமும் இல்லை,நஷ்டமும் இல்லைங்கற நிலைமை.ஆனா,
சின்ன நஷ்டம் கூட நிறைய யோசிக்க வைச்சுது.

அதுக்கப்புறம்தான் நம்ம சனி பகவானை பேக் பண்ணி அனுப்பி வைச்சுட்டு,வாலை சுருட்டிக்கிட்டு, just மார்க்கெட்ல என்ன நடக்குது,
எந்த ஷேர் ஏறுது,ஏன் ஏறுது.எப்ப வாங்கனும்,எப்ப விக்கனும்,இன்னும் நிறைய கவனிக்க ஆரம்பிச்சேன்.கிட்டதட்ட இன்னைக்கு வரை அதான் செஞ்சுகிட்டு இருக்கேன்,ஒரு சில உருப்படியான investment மட்டும்
பண்ணி இருக்கேன்.


சரி..இப்ப வேலு நாயக்கர் சொல்ற நாலு நல்ல விஷயத்தை
கேளுங்க ( இது கண்டிப்பா அறிவுரை கிடையாது ஆனா
என்னோட அனுபவம்).

1.ஷேர் மார்க்கெட் கண்டிப்பாக சூதாட்டக்களம் கிடையாது.நீங்கள்
எந்த அளவு விஷயம் தெரிந்து வைத்துள்ளீர்களோ அந்தளவு
நஷ்டம் தவிர்க்கலாம்.லாபமும் பார்க்கலாம்

2.லாபம் பார்க்க,அவசரம் வேண்டாம்.பொறுமை தேவை.அதிக கால முதலீடுகள் பல சமயங்களில் நல்ல வருமானம் தரும்.
கீழே,நான் சென்ற வருடம் day trading பண்ண சில ஷேர்களோட அன்றைய விலை மற்றும் இன்றைய விலைகளை கொடுத்துள்ளேன்.

IFCI
அன்றைய விலை- Rs.18.00
இன்றைய விலை - Rs.80.00

BHARTI AIRTEL
அன்றைய விலை - Rs.350.00
இன்றைய விலை - Rs.1000.00

RELIANCE COMMUNICATIONS
அன்றைய விலை - Rs.250.00
இன்றைய விலை - Rs.750.00

3.முக்கியமாக, day trading மற்றும் short term ல் ஈடுபடும் போது
அந்த counter பற்றிய அனைத்து தகவல்களும் விரல் நுனியில்
வைத்து இருப்பது நல்லது.முடிந்த அளவு,ஊடகங்களை பயன்
படுத்துங்கள்.ஒரு நாள்,நான் 600 ரூபாய்க்கு ஒரு ஷேர்
வாங்கினேன்.சில நிமிடங்களில்,அது 10% அதிக விலைக்கு
போனவுடன் விற்றுவிட்டேன்.பிறகுதான் தெரிந்தது, அந்த
கம்பெனிக்கு 1 பில்லியன் டாலர்க்கு ஒரு ஆர்டர் கிடைத்த
செய்தி வெளியானதால்தான்,ஸ்டாக் எகிற ஆரம்பித்து
இருக்கிறது.நான் விற்ற இரண்டு வாரத்திலேயே அந்த ஸ்டாக்,
1700 ரூபாய்க்கு போய் என்னை பார்த்து நக்கலாக சிரித்தது.So,
UPDATION is VERY IMP.

4.எல்லாம் தெரிஞ்ச டை கட்டிய கோயிஞ்சாமிகள் மற்றும்
ஊடகங்களில் கிடைக்கும் tips ஆகியவற்றை அப்படியே எடுத்துக்
கொள்ள வேண்டாம்.உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை கொண்டு
வடிகட்டி ஸ்டாக்களை செலக்ட் செய்யவும்.

5.உங்களுக்கு என ஒரு வழிமுறை வைத்துக்கொள்வது நல்லது,
எவ்வளவு லாபம் மற்றும் நஷ்டம் பார்த்தவுடன் வெளியேறுவது
என்பதை முன்பே முடிவு செய்து அதை அப்படியே பின்பற்றுவது
சாலச்சிறந்தது..

நாம பட்ட அடிக்கு,ஒரு புக்கே எழுதலாம்.ஆனா போதும்
நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன்..நான் இன்னுமே
பங்குசந்தைல ஒரு அமெச்சூர்தான்..அதனால இந்த பதிவு
அறிவுரை சொல்றதுக்காக இல்லை..நம்ம கதையை ஊருக்கு
சொன்னா,நாலு பேருக்கு உதவுமேங்கற எண்ணம்தான்..

நம்ம பங்குச்சந்தை குப்புற விழுந்துக்கிட்டு இருக்கிற இந்த
நேரத்துல,இந்த பதிவு பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.
சென்செக்ஸ் target 20000ங்கறது போய் இப்ப 25000,40000ன்னு பேச
ஆரம்பிச்சுருக்கிற இந்த நேரத்துல,நல்லா தெரிஞ்சு,புரிஞ்சு
நிறைய பணம் பண்ணுங்க மக்களே..நம்மளை மாதிரி
இருந்துறாதிங்க!!!

எழுத ஆரம்பிச்சப்ப இருந்த திருப்தி,முடிக்கறப்ப இல்லை..
ஏன்னு தெரியலை..வந்தனம்.

19 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

சேம் அமவுண்ட்..

சேம் எக்ஸ்பீரியன்ஸ்...

சேம் ஃபீலிங்ஸ்....

சேம் ப்ளட்...

ஹி..ஹி...

மங்களூர் சிவா said...

//
அதுக்கப்புறம்தான் நம்ம சனி பகவானை பேக் பண்ணி அனுப்பி வைச்சுட்டு,வாலை சுருட்டிக்கிட்டு, just மார்க்கெட்ல என்ன நடக்குது,
எந்த ஷேர் ஏறுது,ஏன் ஏறுது.எப்ப வாங்கனும்,எப்ப விக்கனும்,இன்னும் நிறைய கவனிக்க ஆரம்பிச்சேன்.கிட்டதட்ட இன்னைக்கு வரை அதான் செஞ்சுகிட்டு இருக்கேன்,ஒரு சில உருப்படியான investment மட்டும்
பண்ணி இருக்கேன்.
//
இது இதுதான் சார் வேணும்கிறது.

நீங்கள் எழுதியது என் அனுபவங்களையும் எழுத தூண்டுகிறது. மிக விரைவில் எழுதுகிறேன்.

மங்களூர் சிவா said...

//
நாம டென்ஷனாகி ஒரு நூறு ரூபா லாபத்துல
வித்துட்டு வெளிய வந்தாச்சு..வித்ததுக்கு அப்புறம்
contract note பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது
லாபம் நூறு ரூபா இல்ல வெறும் பதினாலு ரூபான்னு
//
புரோக்கரேஜ் கால்குலேஷன் தெரிஞ்சிக்கிறதுக்கே ரெண்டு ட்ரேட் பண்ண வேண்டியிருக்கு :-))

Anonymous said...

முதலிட முன்பாக முடிந்தவரை நிறைய வாசியுங்கள். பயிற்சி பெற‌ சில நிறுவ‌ணங்கள் Live Demo வசதி செய்து தருகின்றார்கள். சில மாதங்கள் உங்கள் ஊகங்கள் எந்தளவு நிஜமாகிறது என்பதை நீங்களே பரீட்சித்துப் பார்கலாம்.

நீங்க‌ள் வாங்கும் ப‌ங்கு நிறுவ‌ன‌த்தின் 5 ஆண்டு, 3ஆண்டு, 2ஆண்டு, 1ஆண்டு, 6 மாத‌, 3மாத‌, 1 மாத‌ கால‌ வ‌ள‌ர்ச்சியை ஆராயுங்க‌ள்.

ப‌ங்கு விலை அதிக‌ரித்தால் ஏன் அதிக‌ரிக்கிற‌து என எச்ச‌ரிக்கையுட‌ன்
பாருங்க‌ள்.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ விரும்பினால்‍.... வாங்கிப் ப‌டியுங்க‌ள்.....

ப‌ங்குச் ச‌ந்தை வெற்றி வாய்ப்புக்க‌ள்.


கும‌ர‌ன் ப‌திப்ப‌க‌ம்.
சென்னை 26
044 236 22 680

Anonymous said...

முதலிட முன்பாக முடிந்தவரை நிறைய வாசியுங்கள். பயிற்சி பெற‌ சில நிறுவ‌ணங்கள் Live Demo வசதி செய்து தருகின்றார்கள். சில மாதங்கள் உங்கள் ஊகங்கள் எந்தளவு நிஜமாகிறது என்பதை நீங்களே பரீட்சித்துப் பார்கலாம்.

நீங்க‌ள் வாங்கும் ப‌ங்கு நிறுவ‌ன‌த்தின் 5 ஆண்டு, 3ஆண்டு, 2ஆண்டு, 1ஆண்டு, 6 மாத‌, 3மாத‌, 1 மாத‌ கால‌ வ‌ள‌ர்ச்சியை ஆராயுங்க‌ள்.

ப‌ங்கு விலை அதிக‌ரித்தால் ஏன் அதிக‌ரிக்கிற‌து என எச்ச‌ரிக்கையுட‌ன்
பாருங்க‌ள்.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ விரும்பினால்‍.... வாங்கிப் ப‌டியுங்க‌ள்.....

ப‌ங்குச் ச‌ந்தை வெற்றி வாய்ப்புக்க‌ள்.


கும‌ர‌ன் ப‌திப்ப‌க‌ம்.
சென்னை 26
044 236 22 680

தென்றல் said...

//எழுத ஆரம்பிச்சப்ப இருந்த திருப்தி,முடிக்கறப்ப இல்லை..
ஏன்னு தெரியலை..//

ராதாகிருஷ்ணன், இது சகஜம்தாங்க..
ரொம்ப விசயத்தை ஒரே பதிவுல எழுத நினைச்சதுகூட இருக்கலாம்!

RK said...

//சேம் அமவுண்ட்..

சேம் எக்ஸ்பீரியன்ஸ்...

சேம் ஃபீலிங்ஸ்....

சேம் ப்ளட்...//

இரண்டாம் சொக்கன், என்னோட பேவரைட் பங்குவணிகம் வலைப்பதிவு உங்களுடையதா? அப்படின்னா, உங்க பின்னூட்டம் எனக்கு ரொம்ப ஆச்சர்யம்..உங்களுக்கும் நஷ்டமா!!

RK said...

//இது இதுதான் சார் வேணும்கிறது.//

சிவா, இந்த தெளிவு வர்றதுக்கு நிறைய விலை கொடுக்க வேண்டியிருக்கே..

//நீங்கள் எழுதியது என் அனுபவங்களையும் எழுத தூண்டுகிறது. மிக விரைவில் எழுதுகிறேன்//

சீக்கிரம் எழுதுங்க..ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

RK said...

//இது சகஜம்தாங்க..
ரொம்ப விசயத்தை ஒரே பதிவுல எழுத நினைச்சதுகூட இருக்கலாம்!//

தென்றல்,ரொம்பச்சரி.நிறைய எழுத நினைக்கிறப்ப, ஒரு ஆயாசம் வந்துடுது

மஞ்சூர் ராசா said...

நண்பர் மங்களூர் சிவாவின் பதிவு மூலம் இந்த பதிவிற்கு வந்து உங்க பங்கு சந்தையையும் துயர, இன்ப பதிவுகளையும் படித்தேன். நன்றாகவே நகைச்சுவைக்கலந்து எழுதுகிறீர்கள். இதற்கே ஒரு தனித்திறமை வேண்டும்.

பங்கு சந்தையில் நுழையலாமா என யோசித்துக்கொண்டிருக்கையில் உங்களின் பதிவு கொஞ்சம் எச்சரிக்கையடைய செய்கிறது. நன்றி.

மங்களூர் சிவா said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

RK said...

மஞ்சூர் ராசா,

வருகைக்கு நன்றி.

//பங்கு சந்தையில் நுழையலாமா என யோசித்துக்கொண்டிருக்கையில் உங்களின் பதிவு கொஞ்சம் எச்சரிக்கையடைய செய்கிறது//

ஒரே மூச்சில் நுழையவும் வேண்டாம், எட்டி நின்று வேடிக்கை பார்க்கவும் வேண்டாம்..சந்தை நிலைப்பட்டவுடன்,சிறிது தொகையுடன் களம் இறங்குங்கள்.வாழ்த்துக்கள்

RK said...

சிவா,

தீபாவளி வாழ்த்துக்களுக்கு தாமதமான நன்றி..

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ரசித்து சிரித்தேன்.

RK said...

சாமன்யன்-நன்றி.உங்கள் பதிவை தினமும் படித்தாலும், பின்னூட்டமிட சோம்பேறித்தனம்.தினமும் எழுத வேண்டுகிறேன்

புரட்சி தமிழன் said...

நீங்கள் சார்ந்த துறையில் உள்ள நிறுவனங்களின் மீது முதலீடு செய்யும் போது அந்த நிறுவனத்தின் முழுசெயல் பாட்டையும் உங்களால் கனிக்க முடியும் அந்த நிறுவனம் ஒரு ஆர்டரைபெறும் போது உடனே அந்த பங்கு களை வாங்குங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உயர்ந்ததும் விற்றுவிடுங்கள் அது குறிப்பாக தாங்கள் சார்ந்த துறையின் அனைத்து நிறுவனங்களையும் உன்னிப்பாக கவனியுங்கள் அந்ததுறையில் உள்ள தங்கள் நன்பர்களுடன் தொடர்பிலிருங்கள் வெற்றி நிச்சயம் பின்னர் நீங்கள் பங்குச்சந்தையில் பணக்கார தந்தையாக உருவெடுக்கலாம்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
சாமன்யன்-நன்றி.உங்கள் பதிவை தினமும் படித்தாலும், பின்னூட்டமிட சோம்பேறித்தனம்.தினமும் எழுத வேண்டுகிறேன்
==>
ராதாகிருஷ்ணன்,
நன்றி.மிக்க மகிழ்ச்சி.
பின்னூட்டம் எதுவும் எழுத முடியாட்டாலும்,சும்மா ஒரு எழுத்து அல்லது புள்ளி வச்சிடலாமே.இதற்க்கு அடுத்த பின்னூட்டம் பாருங்க - ஒரு மாதிரிக்கு.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

.

RK said...

சாமன்யன் - புள்ளி வைச்சாச்சு:))

Post a Comment